கொரோனா விடுமுறை காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைக் கல்வி நடவடிக்கையிலிருந்து விடுபட்டிருந்த க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்வி அபிவிருத்தி சபை முன்னெடுத்து வருகிறது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்வி அபிவிருத்தி சபையின் தலைவரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் அவர்களின் தலைமையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, செயலட்டை விநியோகம் செய்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபீர் கரீம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.







No comments: