News Just In

11/24/2020 05:58:00 AM

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- மீனவர்கள் கடற் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு!!


வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து 270 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும். இந்த தாழமுக்க நிலைமை, எதிர்வரும் 44 மணித்தியாலங்களில் தமிழகத்தின் கரையோர பகுதியை நோக்கி நகரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என திணைக்களம் கூறுகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன். குறித்த பகுதிகளில் 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கரையோர பகுதிகளிலுள்ள மீனவர்களை, கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை மீண்டும் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: