News Just In

11/26/2020 09:52:00 AM

கோப் குழு முதல் தடவையாக ஒன்லைன் மூலம் கூடுகின்றது..!!


கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று
(2020.11.26) கூடவுள்ளது.

இந்தக் கூட்டம் முதல் தடவையாக இணைய வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், களனி கங்கை நீர் மாசவடைவது குறித்து கலந்துரையாடுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கோப் குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் இணையவழி முறைமை பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: