இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 11 ஆயிரத்து 60 பேரில் 5,789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்தோடு 405 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: