News Just In

11/02/2020 01:02:00 PM

திருகோணமலை- ஈச்சலம்பற்று கொரோனா சிகிச்சை விளங்கு பிரதேச வைத்தியசாலைக்கு அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் அத்தியவசிய சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு!!


திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் ஈச்சலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கென அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதியுதவியுடன் ஒரு தொகை அத்தியவசிய சுகாதார பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள குறித்த பொருட்களை இன்று மாவட்ட செயலகத்தில் திருகோணமலை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ. பிரேமானந்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ், உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் ,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன்,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா,உதவி ஒருங்கிணைப்பாளர் அ.மதன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




No comments: