News Just In

11/09/2020 02:22:00 PM

கிளிநொச்சியில் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம்...!!


கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப் போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே கிடக்கும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் உயரிய முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் மேற்படி ஆவணப்படுத்தப்பட தேவையான உங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்த வழங்க முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு,
இல- 19,
திருநகர் வடக்கு,
திருநகர்,
கிளிநொச்சி
தொடர்புகளுக்கு:-
074-0055551 / 077-1565340

No comments: