News Just In

11/26/2020 06:07:00 PM

“மாகாண உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை பழைய முறையில் நடாத்துங்கள்"- நாடாளுமன்றத்தில் நஸீர் அஹமட்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“மாகாண உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை பழைய முறையில் நடாத்துங்கள்" என தான் அரசாங்கத்தைக் கோருவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களை பழைய முறையில் நடாத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளுராட்சித் தேர்தல் புதியமுறைப்படி நடாத்தப்பட்டதால் இடம்பெறுகின்ற குழப்ப நிலைகள் நமக்குத் தெரியும்.

நாட்டில் 338 உள்ளுராட்சி சபைகளில் 140 மாத்திரமே ஸ்திரமானதாக இயங்கி வருகின்றது.



வரவு செலவுத் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்ப்பட்ட மாவட்டங்களில் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்வாங்கப்பட்டதை வரவேற்கின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது இதே மாதிரியான கருத்திட்டத்தை கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்தேன்.

ஏறாவூர் சவுக்கடியில் 319 ஏக்கர் காணியும் இதற்கு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. எனினும் கிழக்கு மாகாண ஆட்சி முடிவுற்றதை அடுத்து இத்திட்டம் தொடர முடியாமல் போய்விட்டது.

எனவே அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள தொழிநுட்ப பூங்காவை இதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

அதே போன்று இந்த அரசாங்கம் "பெப்ரிக் பார்க்” ஒன்றையும் அமைப்பதற்கு உத்தேசித்துள்ளது.

எனவே இவ்வாறான திட்டங்களை நாங்கள் பாராட்டுவதோடு எனது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டங்களுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்க இது உதவும்.

இந்தம முயற்சிகளுக்காக பிரதமருக்கம் துறைசார்ந்தவர்களுக்கம் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.” என்றார்.

No comments: