News Just In

11/02/2020 10:55:00 AM

இன்று நடைபெறவுள்ள மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை தீர்மானிக்கும் கலந்துரையாடல்!!


பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா தெரிவித்தார்.

3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை தற்பொழுது மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான பீடத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments: