News Just In

11/25/2020 06:56:00 AM

கொரோனா தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 94ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்
1. கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்

2. சியம்பலாபே தெற்கு பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்

3. கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்

4. பண்டாரகம - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்

No comments: