கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோன்று, தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மஹர சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: