ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் பரவல் காணப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகம் மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பட்டதாரி பயிலுனர்களை இணைந்து வேலைத் திட்டம் டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோர் வழிகாட்டலில் பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ்,மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பட்டதாரி பயிலுனர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் டெங்கு நோயினால் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பரம் மாத ஆரம்பத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.









No comments: