மஹர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிசறை வைத்தியசாலையில் நேற்று முன்தினம்(30) அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது முதலாவது PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், அவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச கோளாறு ஆகியவற்றினால் அவர் கடந்த 23ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: