News Just In

11/28/2020 04:31:00 PM

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16656ஆக அதிகரித்துள்ளது!!


இலங்கையில் இன்று (28.11.2020) மேலும் 430 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,656 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 22,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,738 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 531 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 107 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: