News Just In

11/02/2020 08:56:00 AM

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11000ஐத் தாண்டியது- நேற்று மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியது!!


இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 397 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 41 பேருக்கும் பேலியகொடை மீன் சந்தை தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பினை பேணிய 356 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலுப்பிட்டி, பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுதி எண்ணிக்கை 7586 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எணிக்கை 11060 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 6 ஆயிரத்து 135 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 506 பேர் நேற்றைய தினம் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4905 ஆக அதிகரித்துள்ளது.

No comments: