News Just In

9/08/2020 12:16:00 PM

மட்டக்களப்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!!

(காத்தான்குடி லத்தீப்)
ஜனாதிபதி கோட்டபாயவின் அறிவுறுத்தலுக்கமைய உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் செயல்பாடுகளை மாவட்ட மட்டத்தில் வலுவூட்டபாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது .

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்செயல்பட்டுவரும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின்செயல்பாடுகளை வலுப்படுத்தும் விசேட கூட்டம் இன்று ௦ 8 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது./

இதன்போது கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா எதிர்காலத்தில் இம்மாவட்டமக்களின்பொருளாதாரம், அடிப்படைவசதிகள்,வீட்டுநிர்மாணம்,குடிநீர், மற்றும் அடிப்படைவசதிகளைஏற்படுத்திகொடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது., அந்தவகையில் எதிர்காலத்தில் செயல்பாடுகளை வலுவூட்ட உள்ளூர்,,சர்வதேச தொண்டார்வ நிறுவனங்கள் முன்வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த விசேட கூட்டத்தில் கடந்த கொவிட்1 9 கொரோனா வைரஸ் தாக்கதின்போது, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் திறமையான செயல்பாடுகளுக்கு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாநன்றி பாராட்டினார் .மேலும் இம்மாவட்டத்தில் செயல்படும் 2 9 தொண்டார்வ நிறுவனங்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களின் சாத்தியங்களின் முன்னேற்றங்களும் ஆராயப்பட்டன

இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள்,மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின்பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments: