News Just In

9/04/2020 10:48:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் இடம்பெற்ற நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம்!!



ஏறாவூர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மீராகேணி பிரதேசத்தில் இடம் பெறும் வாராந்த சந்தையில் நேற்று (2020.09.03) நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இடம் பெற்றது. 

இதில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் V.பேரின்பராஜா,மட்டக்களப்பு வடக்கு வலய விவசாய உதவி பணிப்பாளர் E.சுகுத்ததாசன் வடக்கு வலய விவசாய போதனாசிரியர்களான K.நிஷாந்தன்,S.சிறிகண்ணா,தொழில் நுட்ப உதவியாளர் A.அனோஜன்,பயிற்சியாளர் IF.இர்பானா ஆகியோருடன் பல விவசாயிகளும்கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகளின் தோட்டங்களில் காணப்படும் நோய்,பீடை என்பவற்றினால் பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளும் போஷாக்கு குறைவினால் ஏற்பட்ட பாதிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நோய் பீடை என்பனவற்றின் தாக்கங்களுக்குமான விளக்கப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

மேலும் இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதிப்புக்குள்ளான தாவர பகுதிகளுடன் வருகை தந்தமை ஒரு சிறப்பம்சமாகும். 

இதன் போது விவசாய போதனாசிரியை கருத்து தெரிவிக்கையில், இப்பயிர்ச் சிகிச்சை முகாம் நிரந்தரமாக ஒவ்வொரு மாதமும் முதலாம் வியாழக்கிழமைகளில் காலை 09.00 மணிக்கு இடம் பெறுமெனவும் தெரிவித்தார். மேலும் விவசாய இரசாயனப் பாவனையை குறைத்து சேதன விவசாயத்தை மேற்கொள்வதன் ஊடாக வளமான நஞ்சற்ற எதிர்காலத்தை உருவாக்கலாம் எனவும் தெரிவித்தார்








No comments: