கிராம மட்டங்களில் மக்களுக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அதிகாரிகள் மட்டக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை 04.09.2020 பிற்பகல் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட கூட்டத்தில் கிராம அலுவலர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் அலுவலர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட இன்னும் பல துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டளர்.
கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்குத் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளும் இங்கு ஆராயப்பட்டன.
மேலும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் இங்கு கருத்தப் பகிர்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக கல்வி சுகாதாரம் வாழ்வாதாரம் விவசாயம் மீன்பிடி கைத்தொழில் ஊக்கவிப்பு உட்கட்டுமான அபிவிருத்திகள் பற்றியும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கான வினைத்திறனுள்ள விளைதிறனுள்ள எதிர்கால அபிவிருத்திகளை கூருணர்வோடு ஆராய்ந்து நீடித்து நிலைக்கக் கூடிய அபிவித்திக்காகத் திட்டமிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.







No comments: