சீனாவை சேர்ந்த 23 வயதான சென் என்ற இளைஞருக்கு கடந்த 17 ஆண்டுகளாக தலைவலி பிரச்சனை இருந்துள்ளது.
தனது ஆறு வயது முதல் கை மற்றும் கால்களில் உணர்வுகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் மரபணு பிரச்சனையாக இருக்கும் என குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் கடந்த 2015ம் ஆண்டு அவரது உடலின் வலது பகுதி முழுவதும் உணர்வு இல்லாமல் போனதால், மருத்துவமனையை நாடியுள்ளனர்.
தொடக்கத்தில், இறைச்சியை அதிகம் உட்கொண்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்தனர்.
ஆனால் சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த இளைஞரின் மூளையில் 5 இன்ச் நீள புழு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நோய்க்கு sparganosis mansoni என்று பெயர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து 17 ஆண்டுகளாக மூளையில் இருந்த புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் புழு இல்லாததால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இதனை மேற்கொண்டதாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments: