News Just In

7/14/2020 06:19:00 PM

கொரோனா எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 07 பேரில் மூன்றுபேர் ஒம்மனில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் இராஜாங்கனை, லங்காபுரவில் 2 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது 654 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் அதேவேளை 1988 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: