ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் ஒலிபெருக்கி வசதிக்கு ஏறாவூர் நகர சபை பிரதி முதல்வர் எம்.எல். றெபுபாசம் உதவியளித்துள்ளார்.
இப்பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கி வசதி இல்லாதது நீண்டகாலக் குறையாக இருந்து வந்தது.
இதனையடுத்து பள்ளிவாசல் நிருவாகத்தினர் தமது பள்ளிவாசலின் தேவையினை நகர சபை பிரதி முதல்வரிடம் முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தக் குறை நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
பள்ளிவாசல் ஒலிபரப்பு வசதிக்காக தனது சொந்த நிதியிலிருந்து நகர சபை பிரதி முதல்வர் றெபுபாசம் 20 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
இந்த நிதிக் கையளிப்பு திங்கட்கிழமை 01.06.2020 இரவு இடம்பெற்றது. நகர சபை பிரதி முதல்வர் றெபுபாசம் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் நிதியைக் கையளித்தார்.






No comments: