மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திராய்மடு பிரதேச மாநகர காணியினுள் இப் பண்ணை ஆரம்பித்து வைப்பதற்கான சிரமதானப்பணி இன்று (06.06.2020) செரி நிறுவனம் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர்கள் மத்தியில் வீட்டுத்தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக ஆரம்பிக்கப்படும் இளைஞர் பண்ணையில் முதற்கட்டமாக 181 இளைஞர்கள் பங்குபற்றி பயன்பெற உள்ளனர்.
இதன் ஆரம்பகட்ட நிகழ்வில் முதல்வர் தி.சரவணபவன், செரி நிறுவனப் பணிப்பாளர், இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
இன்று மாநகர முதல்வர் அவர்களின் பிறந்தநாளை இளைஞர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர், இதன்போது முதல்வரின் கரத்தினால் தென்னை மரம் நடப்பட்டதுடன், மரக்கன்றுகளை பிறந்தநாள் பரிசாகவும் வழங்கிவைத்தனர்.










No comments: