ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திண்மக்கழிவுகளில் இருந்து மின்சக்தியையும் எரிசக்தியையும் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம்பற்றி ஆராயப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திண்மக்கழிவுகளிலிருந்து மின்சக்தியையும், இன்னபிற எரி சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியுமென டபிள்யூ ரீ. டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சந்தனம் பிச்சை விளக்கமளித்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய ஊடாக கொழும்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முதலாக மட்டக்களப்பில் இத்திட்டம் பரீட்சாத்தமாக நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கலந்துலையாடலாக இது அமைந்துள்ளது.
இவ்விசேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சந்தனம் பிச்சை நெவில் மெல்ரோய், அல்பிரட் சம்பத், டபிள்யூ. ரீ. டெக் நிறுவனத்தின் இணைப்பாளர் பீ. குமார ரத்னம், மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments: