மேலும் இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, கொழும்பு 9 ஊருகொடவத்தையை சேர்ந்த மொகமது சபீக் என்பவர் ஐயங்கேணி பகுதியை சேர்ந்த ஷியாமியா( 24) என்பவரை அண்மையில் திருமணம் செய்திருந்தார். இன்று மாலை ஷியாமியா கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
திருமணம் முடிந்து 9 நாட்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அடித்து வயரால் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம், என சந்தேகிக்கப்படும் நிலையில், கணவரான நவாஸ் மொஹமட் சபீக் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த நபர் வேறு பெண்ணை திருமணம் முடித்து, விவாகரத்து செய்த பின்னேயே இந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் தொடர்கின்றனர்.

No comments: