News Just In

6/02/2020 09:42:00 PM

ஏறாவூர் நகர மக்களுக்கு நகர சபையின் புதிய கழிவு சேகரிப்பு நடைமுறை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திண்மக் கழிவகற்றலில் ஏறாவூர் நகசர சபை எதிர்கொண்டு வரும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஏறாவூர் நகர மக்களுக்கு நகர சபை நிருவாகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது விடயமாக ஏறாவூர் நகர சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் நககரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் சேதனப் பசளை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவிருப்பதால் மொதுமக்கள் நகர சபையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கழிவுகளை வேறுபடுத்தி கழிவு சேகரிப்பு வாகனங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

கழிவுகள் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு குறித்த தினங்களில் மாத்திரம் அகற்றப்படும் என்பதனை பொதுமக்கள் நினைவில் கொள்ளவும்.

வாரத்தின் திங்கள், செவ்வாய் தினங்களில், மர இலைகள், உணவுக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், அரை அடி நீளமாக வெட்டி துண்டாக்கப்பட்ட வாழை மர நெட்டி போன்ற உக்கக்கூடிய கழிவுகள் அகற்றப்படும்.

புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் உக்கமுடியாத கழிவுகளான பிலாஸ்டிக் பொருட்கள், பால்மா ஈயத்தாள் பக்கெட்டுகள், யோகட் கப்கள், பொலித்தீன் பேக், கற்கள், கண்ணாடிப் பொருட்கள் பம்பஸ் போன்றவையும் அச்சிடப்பட்ட தாள்களும் அகற்றப்படும்.

சனி ஞாயிறு வார இறுதி நாட்களில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட இலை மட்டைகள், மர விதைகள், தென்னை உரி மட்டைகள், தெம்பிலி குரும்பைகள் போன்ற கழிவுகள் அகற்றப்படும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றி கழிவுகளை தரம்பிரித்து கழிவு சேகரிப்பு வாகனங்களிடம் வழங்குவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு ஏறாவூர் நகர பிரதேச மக்களை நகர சபை நிருவாகம் கேட்டுக் கொள்கின்றது.




No comments: