News Just In

5/02/2020 10:12:00 AM

மட்டக்களப்பில் அரச ஊழியர்களை ஊக்குவிக்கும் முகமாக உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அம்கோர் எனப்படும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் அரச ஊழியர்களை ஊக்குவிக்கும் முகமாக உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலக உதவியாளர்கள் சாரதிகளின் சேவையினை பாராட்டி ஊக்குவிக்கும் முகமாக தமது நிறுவனம் உலர் உணவுப்பொதிகளை வழங்கியுள்ளதாக அம்கோர் தன்னார்வ அமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களிடம் அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான பி. முரளிதரன் வெள்ளிக்கிழமை (01.05.2020) வைபவ ரீதியாக கையளித்தார்.

மாவட்ட செயலகம் அத்துடன் 14 பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் சுமார் 1200 ஊழியர்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிக்காந் பிரதேச செயலாளர்கள் அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் வை. சிவயோகராஜன் திட்ட உத்தியோகத்தர் எஸ். செல்வகுமார் கள உத்தியோகத்தர் கிருஷ்ணவேணி ஆகியோரும் நிவாரணப் பொதி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் நாட்டின் பல மாவட்டங்களில் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments: