News Just In

5/14/2020 05:51:00 PM

அனுமதியின்றி விற்பனைக்காக மரக்கடத்தல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பொத்தானை பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக மரக்கடத்தில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபரும், மூன்று வகையான மரங்களும் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொத்தானை பகுதியில் வெட்டப்பட்ட துண்டு மரங்கள் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் இருந்த வேளையில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான பனிச்சை, பாலை, மதுரை மரங்களுடன், சந்தேக நபர் ஒருவர் வட்டார வன உத்தியோகத்தர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.








No comments: