News Just In

5/30/2020 05:30:00 PM

காரைதீவு பிரதேச செயலகத்தில் மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வும் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கலும்

(நூருள் ஹுதா உமர்)
மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வு
அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக துரிதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கலந்துகொண்டு மரங்களை நட்டு ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கலைஞர்களுக்கான நலனோம்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (29) காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் வசிக்கும் தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கான உதவித்தொகையை உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். பார்த்திபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் மற்றும் காரைதீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

No comments: