News Just In

5/19/2020 09:24:00 PM

இலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உள்ளானவர்களின் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 443 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: