இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் (2020.05.05) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஒன்பது (09) புதிய நோயாளர்கள் பதிவாகயிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 760ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், 213 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, 538 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று(2020.05.04) மேற்கொள்ளப்பட்ட 986 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5/05/2020 08:40:00 PM
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: