News Just In

5/03/2020 04:27:00 PM

விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்


கோவிட் -19 ஆபத்து நிறைந்த பகுதிகளாக இருந்த பேருவளை, கண்டி – அக்குரண மற்றும் களுத்துறை – சீனகோட்டுவ பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இராணுவத் தளபதியும் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பேருவளை, கண்டி – அக்குரண மற்றும் களுத்துறை – சீனகோட்டுவ பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இதனால் அந்தப் பிரதேசங்களுக்கு உள்ளே இருந்து எவரும் வெளியில் செல்லவோ அல்லது அந்த பிரதேசங்களுக்கு உள்ளே செல்லவோ எவரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: