கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நா.தனஞ்ஜெயன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நமது பிரதேச இளைஞர்களின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் திட்டத்தின் கீழ் குறித்த தானியங்கி தொற்று நீக்கும் கருவி நடைமுறைக்கு வந்துள்ளது.
நபர் ஒருவர் உள் நுழையும் போது கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு தானாக நடைபெறும், இந்த கருவியினை கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் பணி புரியும் இயந்திரவியலுக்கு பொறுப்பான சங்கர் நாகராஜா மற்றும் ரெய்மன் ஜூலியன் டெனியுட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் முதல் தடவையாக மாநகர சபையில் மக்களின் பாவனைக்காக இன்று விடப்பட்டது, இதன் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நா.தனஞ்ஜெயன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கருவியானது எமது இளைஞர்களின் தொழில்நுட்ப திறமையினை எடுத்துக்காட்டுவதுடன் இக் கருவி பொதுமக்கள் அதிகம் சேரும் காரியாலயங்களிலும் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

























No comments: