( எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள அரசடிச்சேனை எனும் இடத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி சேதமடைந்த நிலையில் உள்ளது.
முச்சக்கரவண்டியில் தந்தையும் மகனும் வயலுக்கு சென்றுகொண்டிருந்தவேளையில் வீதியோரத்திலிருந்து மாடு குறுக்கே சென்றவேளையில் முச்சக்கர வண்டியும் மாடும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வவுணதீவு பிரிவிலுள்ள 1990 நோய்காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

No comments: