News Just In

5/13/2020 12:43:00 PM

மட்டக்களப்பில் மணல் ஏற்றுவதற்கான புதிய அனுமதிப்பத்திரம் நடைமுறை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணுக்கான புதிய அனுமதிப்பத்திரம் நடைமுறை திங்கட்கிழமை  11.05.2020   முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் கனியவள திணைக்கள பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர்.எம். பாரிஸ் குறிப்பிட்டார்

புதிய நடைமுறை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் புதிய சுற்று நிருபத்தினுடாக புதிய சட்டத்தினுடாக வாகனங்களின் இலக்கங்களை மண் அனுமதிப்பத்திர உரிமையாளரே அனுமதிப்பத்திரத்தில் இட்டுக்கொள்ளமுடியும்.

அடுத்து மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதியினை அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளவும் முடியும்.

அத்தோடு வழங்கப்படவுள்ள கீயூப்புக்களை வாரநாட்களுக்குள் எப்படியாவது ஏற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் அசௌகரியங்களைத் தவிர்க்கும் முகமாக இந்த புதிய நடமுறை புவிச்சரிதவியல் கனியவள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சகலவிதமான நடவடிக்கையினையும் மாவட்ட காரியாலயத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

புதிய அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட மணல் ஏற்றிச்செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.



No comments: