மில்கோ, பெலவத்த மற்றும் நெஸ்லே ஆகிய உள்நாட்டு பால்மா நிறுவனங்கள் நிதியமைச்சிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 28ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலையேற்றத்திற்கு அனுமதி வழங்குவதாக நுகர்வோர் அதிகார சபை, குறித்த நிறுவனங்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என அரச அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதிக்கமைய 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையானது 380 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதோடு, 1 கிலோகிராம் பால்மாவின் விலை 945 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக மில்கோ தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments: