News Just In

5/01/2020 08:25:00 PM

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் முன்னணியில் உள்ளார்!!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வௌியிடுவதில் ஹிஸ்புல்லா அவர்கள் முன்னணியில் திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இன்று (01) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...
மட்டக்களப்பு-காத்தான்குடியில் கொரோனா தொற்றாளர்களை கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா கூறுவது தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும்.

முன்னரும் ஹிஸ்புல்லாஹ் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வௌியிட்டுள்ளார். கரடியனாறு வைத்தியசாலையை நேரடியாக வந்து பாருங்கள், அது முழுமையாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.

வைத்தியசாலையை சுற்றி மக்கள் குடியிருக்கின்றார்கள் எனவே ஹிஸ்புல்லாஹ் இந்த விடயத்தில் அபாண்டமான பொய்களைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்த முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

No comments: