News Just In

5/12/2020 08:57:00 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனையில் சமூக சேவை திணைக்களத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய இரண்டாம் கட்டமாக வீடு வீடாக சென்று நிதி வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில் சமூக சேவை திணைக்களத்தினால் நிதி உதவி வழங்கும்; நிகழ்வு சமூக சேவை திணைக்களத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் செயலக கணக்காளர் எம்.எஸ்.ஐ.சஜ்ஜாத், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் சகிதம் வீடு வீடாக சென்று நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சமூக சேவை திணைக்களத்தினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் ஒன்பது கிராம சேவகர் பிரிவுவிலுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு ஐயாயிரம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் மாற்றுத்திறனாகள் 459 பேருக்கும், முதியோர்கள் 754 பேருக்கும், சிறுநீரக பாதிப்புக்குள்ளான 23 பேருக்கும், பொதுசன மாதாந்த உதவி பெறும் 1745 பேருக்கும் ஐயாயிரம் ருபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டதாக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தெரிவித்தார்.










No comments: