News Just In

5/24/2020 11:31:00 AM

காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு கூப்பன்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினூடாக உலர் உணவு கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை திட்ட இணைப்பாளர் அன்ரன் கேபிரியல், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்;ட 32 குடும்பங்களுக்கு சதோச விற்பனை நிலையத்தில் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் உலர் உணவு பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் மூவாயிரத்து ஐயாயிரம் (3500.00) ரூபாய் பெறுமதியான கூப்பன் வழங்கி வைக்கப்பட்டது.










No comments: