News Just In

5/03/2020 09:38:00 PM

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 03 நபர்கள் இன்று (மே 3) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 708ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 184 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, 517 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: