News Just In

5/17/2020 05:46:00 PM

யாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பிரதேசத்தில் தனது சகோதரிக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (16) தென்மராட்சி-கொடிகாமம்-வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவன் – மனைவி இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை குத்தியுள்ளார்.

சம்பவத்தில் 23 வயதான கந்தசாமி சசிகலா என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: