News Just In

5/23/2020 09:34:00 AM

சில மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!!


நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: