News Just In

5/08/2020 12:30:00 PM

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

அடை மழை காரணமாக மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (07) நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து இடம்பெறுள்ளது. இதை தொடர்ந்து படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




No comments: