News Just In

5/01/2020 05:32:00 PM

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு


வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
கோவிட் -19 இலிருந்து அனைவரையும் பாதுகாக்க குறித்த வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் இயன்றளவு வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வெசாக் உற்சவம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளும் பொருத்தமான சுகாதார பரிந்துரைக்கு ஏற்ப பின்பற்றபட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் வெசாக் பண்டிகையின் போது தயாரிக்கப்படும் வெசாக் கூடுகள், தோரணங்கள் மற்றும் அலங்காரங்களை வீட்டுக்கு மட்டுமே மட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: