ஊரடங்குச் சட்ட உத்தரவினை மீறி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த குற்றச்சாட்டில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் பயணித்தார்கள் என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர்கள் பயணித்த அக்குரஸ்ஸ பிரதேச சபைக்குரிய லொறியினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5/03/2020 07:36:00 PM
ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் கைது!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: