News Just In

5/24/2020 05:26:00 PM

வீட்டில் இருந்தவாறே அமைதியாக பெருநாளைக் கொண்டாடுங்கள் – பொலிஸார் அறிவுறுத்தல்



இன்று ஞாயிற்றுக்கிழமை (24) புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறே அமைதியாக கொண்டாடும்படி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தவாறு பெருநாள் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளும்படி வாழைச்சேனை பொலிஸாரினால் வீதி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து கொடிய கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்புப் பெற அனைவரும் இந்நாளில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களை வேண்டிக் கொண்டுள்ளனர்.

கல்குடா பகுதியில் இன்றையதினம் அனைவரும் வீடுகளில் பெருநாள் தொழுகையினை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments: