News Just In

5/19/2020 07:06:00 PM

சற்றுமுன் 28 தொற்றாளர்கள் அடையாளம்- இலங்கையில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக கடற்படையைச் சேர்ந்த 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: