News Just In

5/03/2020 02:45:00 PM

தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் சட்டச் சிக்கல்...!

பொதுத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் சட்டச் சிக்கல் எழுந்துள்ள எழுந்துள்ளதாக நேற்று (02) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில்  நடைபெற்ற கட்சித் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினங்களான மார்ச் 17, 18,19 ஆகிய தினங்கள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அரச விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சட்டச்சிக்கல் தொடர்பாக சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

No comments: