சமூக வலைத்தளத்தின் ஊடாக போலியான தகவல்கள் மற்றும் கடும்போக்கான கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய அவ்வாறான நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் , கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பதில் பொலிஸ்மா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு விமர்சனங்களை முன்வைத்தும், அவர்களின் சில குறைபாடுகளை திரிவுபடுத்தியும் வீடியோக்களை வெளியிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதன்னை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: