மட்டக்களப்பு-வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் பரமேஸ்வரன் (56) மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை பிரிந்து தனியாக பல காலமாக வாழ்ந்து வந்ததுடன்.
இன்று தனது மனைவியின் இருக்கும் இடத்தில் சென்று தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: