News Just In

4/29/2020 07:49:00 PM

பொலிஸ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலம் நீடிப்பு!!


அத்தியாவசி சேவைகளுக்காக வழங்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலம் மே 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் பொலிஸ் அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் இறுதி தொடக்கம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தனியார் துறையினர், வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என ஊழியர்களின் எண்ணிக்கைக்கு அமைய மூன்று மட்டங்களில் இந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

இந்த ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலம் நாளை ஏப்ரல் 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதன் செல்லுபடிக் காலம் மே 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

இதேவேளை, ஊடரங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்றுவரை நாடுமுழுவதும் 41 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அத்துடன், 10 ஆயிரத்து 700 வாகனங்கள் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கூறினார்.

No comments: