வெலிகந்த வைத்தியசாலைக்கு கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரே இவ்வாறு குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார்.
குறித்த நபருக்கு அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி கொரோனா தொற்று இல்லை என கிடைத்த அறிக்கையினை தொடர்ந்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் குணமடைந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இன்று (25) மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வீடு திரும்பியுள்ள குறித்த நபர் வீட்டில் மேலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார் எனவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் மேலும் தெரிவித்தார்.

No comments: